Xerostomia Solution :
Xerostomia Solution :

Xerostomia Solution :

அடிக்கடி நாவறட்சியால் அவதிப்படுபவரா நீங்கள் ? நாவறட்சிக்கான காரணங்களை பற்றி அறிவீர்களா? அதனை நீக்க என்னென்ன உணவு பொருள் அவசியம் என்பதை பற்றி அறிவீர்களா? இது உங்களுக்கான உபயோகமான பதிவு.

நாவறட்சி ஏற்படக் காரணம்:

* சர்க்கரை நோய், உடல் உஷ்ணம் ,அதிகமாக வியர்வை விடுதல் ,அதிகமாக சிறுநீர் கழித்தல், வயிற்றுப்போக்கு, நரம்புத்தளர்ச்சியும், பால் கொடுக்கும் தாய்மார்கள் என அனைவருக்கும் நாவறட்சி ஏற்படும்.

* நாவறட்சியிலிருந்து காக்கும் உணவுகள் :

1. ஆவாரை இலை, அரசஇலை ,நித்யகல்யாணி இலைகள் இவற்றை நீர்விட்டு காய்ச்சி குடிக்க நாவறட்சியை தடுக்கலாம்.

2. வெள்ளரி, தர்பூசணி, என நீர் காய்களை உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. அதிமதுர சூரணத்தை சாப்பிட நாவறட்சி நீங்கும்.

4. புதினா இலை ,சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து கஷாயம் பதத்தில் குடித்து வர நாவறட்சி நீங்கும்.

5. கற்றாழைச் சாறை வாயில் வைத்துக் கொப்பளித்து வர நாவறட்சி குணமாகும்.

6. நாவறட்சிஇருக்கும்பொழுது கிரீன் டீ குடித்தால் நல்ல பலனைத்தரும்.

7. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 5 லிருந்து 10 நிமிடம் வரை வாயில் வைத்து கொப்பளித்து வந்தால் நாவறட்சி நீங்கும்.

8. ஏலக்காய் நன்றாக நசுக்கி பனைவெல்லத்துடன் சேர்ந்து காய்ச்சி பருகி வர நாவறட்சி குணமாகும்.

9. ஆடாதோடா இலையை பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்து வர நாவறட்சி நீங்கும்.

10. நாவறட்சி இருக்கும்பொழுது எலுமிச்சை பழச்சாற்றை ஜூஸ் செய்து குடித்து வர நாவறட்சி குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here