Xavier Britto About Master Release
Xavier Britto About Master Release

மாஸ்டர் படம் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த மாஸான பிளானை தயாரிப்பாளர் போட்டு உடைத்துள்ளார்.

Xavier Britto About Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், KPY தீனா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், ரம்யா, வர்ஷா பொல்லம்மா என பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருக்க வேண்டியது. ஆனால் பரவி வரும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக இப்படம் ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விட்டது.

லூசுங்களா டா நீங்க.. அஜித் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா – பரபரப்பை ஏற்படுத்திய பதிலடி

இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான பிரிட்டோ அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படம் நிச்சயம் தியேட்டரில் மட்டும் தான் வெளியாகும்.

இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் அப்படி இல்லை எனில் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் ஆனால் தியேட்டரில் மட்டும் தான் ரிலீஸாகும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

OTT ரிலீஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.