Worst Actors in Kollywood

Worst Actors : பிரபல இணையதளம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் மோசமான நடிகர்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டில் தளபதி விஜயின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார் என தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அவ்வளவு ஏன்? மெர்சல் படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதுகளையெல்லாம் வாங்கினார்.

அப்படியிருந்தும் பிரபல இணையதளம் ஒன்று தமிழ் சினிமாவின் மோசமான நடிகர்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டில் தளபதி விஜயின் பெயரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயுடன் சிம்பு, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

அந்த லிஸ்ட் இதோ உங்களுக்காக

1. சாந்தனு
2. ஆதி
3. சிம்பு
4. ஜெயம் ரவி
5. விஷால்
6. விஜய்

கடந்த 2017-ல் IMDB இணையதளம் வெளியிட்டு இருந்த மோசமான நடிகர்கள் பட்டியலிலும் சூர்யா, விஜய் சேதுபதி, அஜித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.