World Wrestling Championships : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship

World Wrestling Championships :

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ‘கிரிகோ-ரோமன்’ எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் மணிஷ் (67 கி.கி.,), சுனில் குமார் (87 கி.கி.,), ரவி (97 கி.கி.,) தோல்வியடைந்து ஏமாற்றினர்.

கஜகஸ்தான் தலைநகர் நுார்-சுல்தானில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. தற்போது ஆண்களுக்கான ‘கிரிகோ-ரோமன்’ எடைப்பிரிவு போட்டிகள் நடக்கின்றன. இதில் 97 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரவி, சீனதைபேயின் செங் ஹயோ சென் மோதினர்.

சென்னை, செங்கல்பட்டு ஏரியாக்களில் மட்டுமே 50-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகும் உச்சக்கட்டம்.!

இதில் ரவி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2வது சுற்றில் ரவி 0-7 என, செக்குடியரசின் ஆர்துர் ஓமரோவிடம் வீழ்ந்தார்.

பின், 87 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுனில் குமார், அமெரிக்காவின் ஜோசப் பாட்ரிக் ராவ் மோதினர். இதில் சுனில் குமார் 0-6 என தோல்வியடைந்தார்.

அடுத்து நடந்த 67 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிஷ் 1-10 என, பல்கேரியாவின் டெய்விட் திஹோமிரோவ் டிமிட்ரோவிடம் வீழ்ந்தார்.

ஏற்கனவே முதல் நாளில் நடந்த ‘கிரிகோ-ரோமன்’ எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் ஹர்பிரீத் சிங் (82 கி.கி.,), சாகர் (63 கி.கி.,), மஞ்ஜீத் (55 கி.கி.,), யோகேஷ் (72 கி.கி.,) தோல்வியடைந்தனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.