Manju Rani
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ பிரிவில் இந்தியாவின் வீராங்கனை வெள்ளி வென்றார்.

World Women’s Boxing Champion : உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ பிரிவில் இந்தியாவின் வீராங்கனை மஞ்சுராணி வெள்ளி வென்றார்.

ரஷியாவின் உலன் உடே நகரில் நடைபெறும் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஏற்கெனவே நட்சத்திர வீராங்கனை மேரி கோம், ஜமுனா போரோ, லவ்லினா போரோகைன் ஆகியோர் அரையிறுதிச் சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்து வெண்கப் பதக்கம் மட்டுமே வென்றனர்.

இந்திய வீராங்கனைகளுள் மஞ்சுராணி மட்டுமே 48 கிலோ எடைப்பிரிவில் இறுதிக்குள் நுழைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரஷியாவின் எகடேரினா பல்சேவாவுடன் மோதினார். இதில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார் எகடெரினா.

2-ஆம் நிலை வீராங்கனையான எகடெரினாவுடன் முதல் சுற்று முதலே ஆக்ரோஷமாக மோதினார் மஞ்சு.

எனினும் கடைசி 3 நிமிடங்களில் எகடெரினா சரமாரியாக நேர்த்தியாக விட்ட குத்துகளால் மஞ்சுராணி நிலைகுலைந்தார்.

கடைசி சுற்றில் மஞ்சுராணி எச்சரிக்கையாக ஆடியது, ரஷிய வீராங்கனைக்கு சாதகமாக அமைந்தது.

இதனால் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கத்தையும் கைப்பற்றினார் எகடெரினா.

தான் முதன்முதலாக பங்கேற்ற உலக சாம்பியன் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றார் 19 வயது இளம் வீராங்கனை மஞ்சுராணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here