
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் வெற்றியை இந்திய அணி பதித்தது. இத்தொடரின் முதல் வெற்றி இது .
பெண்களுக்கான 6-வது ஓவர் உலக கோப்பை போட்டி நேற்று தொடங்கியது. இதில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றது.
இரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதி பின் டாப்-2 இடத்தில் இருக்கும் அணிகள் மொத்தம் 4 அணிகள் அரை இறுதியில் மோதும்.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தொடக்கம் எதிர்பார்த்த படி அமையவில்லை.
தொடக்க ஆட்டக்காரகராக களம் இறங்கிய தனியா மற்றும் மந்தனா ஆகியோர் 9, 2 ரன்களில் அவுட் ஆகினர்.
பின் ஜெமிமா, ஹர்மன்பிரீத் கவரும் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். எத்தனை பற்றியும் கவலை கொள்ளாமல் கவுர் தனது திறமையை முழுமையாக வெளிக்காட்டினார்.
இதன் விளைவாக 134 ரன்கள் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி எடுத்து இருந்தது. 4 விக்கெட் இருந்த நிலையிலும் கவுர் 49 பந்துகளில் தனது முதல் சத்தத்தை எட்டினர்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பெண் என்ற உலக சாதனை படைத்தார் கவுர்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுடன் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக படியான ஸ்கோர் இந்திய அணி எடுத்து மற்றும் ஒரு சாதனையை படைத்தது.
195 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. இந்திய அணி 34 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.