World Cup Hockey Tournament - India vs Canada
World Cup Hockey Tournament - India vs Canada

World Cup Hockey Tournament – India vs Canada – உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா, கனடாவை எதிர்கொள்ள இருக்கின்றது. 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.

16 நாடுகள் பங்குபெற்று இருக்கும் இந்த தொடரில் இந்தியா “பி” பிரிவில் இடம் பிடிக்து உள்ளது.

அந்த பிரிவில் தென்ஆப்பிரிக்கவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பெல்ஜியத்துடன் போராடி 2-2 என்று சமன் செய்தது.

அடுத்து அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள மற்றொரு அணி கனடா அணியாகும். நாளை இந்திய அணி பி பிரிவில் மீதம் இருக்கும் அந்த கனடா அணியுடன் மோத இருக்கின்றது.

இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் கனடாவுடன் நாளை மோத இருக்கின்றது.

இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கின்றது. பி பிரிவில் இந்தியா மற்றும் பெல்ஜியம் 4 புள்ளிகளுடன், கனடா மற்றும் தெனாப்பிரிக்கா அணிகள் 1 புள்ளிகளுடன் இருக்கின்றது.

நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடும்.

நாளை முதல் போட்டி பெல்ஜியம்-தெனாப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றது.

இந்த போட்டியின் வெற்றியை பொறுத்தே அடுத்து இந்தியா அணி விளையாட இருக்கும் சூழல் இருப்பதால், இது இந்திய அணிக்கு சற்று சாதகமான விஷயமே.