India World Cup Qualifier
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி மற்றும் வங்காளதேசம் மோதினர்.

World Cup Football Ind Vs Ban : 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

இதற்கான ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. மேலும் ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் இதே பிரிவில் உள்ளனர்.

சூப்பர் ஓவர் முறையில் புதிய விதிமுறை .!

இந்திய அணி தனது முதலாவது லீக் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது போட்டியில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை  எதிர்கொண்டது.

இந்த ஆட்டம் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த போட்டியில் வங்காளதேசம் சார்பில் 42-வது நிமிடம் சாத் உத்தின் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர் அடில் கான் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தனர். அதன் பிறகு, இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி சமனில் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here