World Cup Cricket
World Cup Cricket

World Cup Cricket – இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது.

உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்ய அனைத்து நாடுகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றது .

15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் அடுத்த மாதம் இறுதிக்குள் ஐசிசி-யிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்திய அணி சமீப காலமாக 17 முதல் 18 பேர் கொண்ட அணிகளுடன் விளையாடி வருகிறது. இதனால் கூடுதலாக ஒன்றிரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணிதான் செல்ல முடியும் என்பதால் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்வது என தேர்வுக்குழு ஆலோசனை செய்து வருகிறது.

ஏறக்குறைய 14 வீரர்களின் பெயர்களை தேர்வுக்குழுவினர் தயார் செய்து விட்டது . தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்தான் இந்தியாவுக்கு உலகக்கோப்பைக்கு முன்பான கடைசி தொடராகும்.

இந்தத் தொடரின் முடிவில் அந்த ஒரு இடத்தை முடிவு செய்ய தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த ஒரு இடம் ஜடேஜா அல்லது விஜய் சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு எனக்கூறப்படுகிறது.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் இருவரில் ஒருவர் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்கலாம்.

இதனால்தான் இருவருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. விஜய் சங்கர் களம் இறங்கவில்லை.

ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் உறுதியாக இடம்பெறுவார்கள். ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டால் அவரும் இடம்பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இடம் பெறலாம்.

ஒருவேளை கூடுதல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்று நினைத்தால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு. மாறாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்றால் விஜய் சங்கர் இடம் பெறலாம். இதனால் இருவருக்குமிடையில் கடும்போட்டி நிலவுகிறது.

யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய அணியின் வெற்றி மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும் என்றே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.