
Boxing : உலக மகளிர் குத்துச்சைடை சாம்பியன் போட்டியில் குறைந்தது 3 பதக்கங்கள் வெல்வோம் என இந்திய குத்துச்சண்டை சம்மேளன உயர் செயல்திறன் இயக்குநர் சாந்தியாக்கோ நைய்வா கூறி உள்ளார்.
வரும் 15-ஆம் தேதி அதாவது நாளை முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற இருக்கின்றது.
இதில் பல நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மற்றும் இதை குறித்து நைய்வா கூறுகையில் குறந்தது 3 பதக்கங்கள் வெள்ள திட்டமிட்டு இருபதாவாகும் அதில் தங்கமும் அடங்கும் என்றும் கூறினார்.
மேலும் மூத்த வீராங்கனை மேரி கோம் தலைமையில் 10 பேர் கொண்ட இந்திய அணி பங்கு பெறுகின்றது.
மற்றும் இப்போட்டியில் மேரிக்கோம் தனது 6-வது தங்க பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இம்முறை போட்டிகள் கடுமையாக உள்ளதால் இந்திய போட்டியாளர்கள் கடும் பியிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
வெளிநாட்டு போட்டியாளர்களின் பயம் :
இந்திய நாட்டின் தலைநகரான டெல்லி இப்பொழுது முன்பை விட அதிக காற்று மாசு அடந்து உள்ளது.
இதன் காரணத்தால் மற்ற போட்டியாளர்கள் சற்றே பயத்தில் உள்ளனர். போட்டியில் சிறப்பாக செயல்பட ஒரு நல்ல சூழல் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.