World Boxing
World Boxing

World Boxing – மகளிர் தேசிய குத்துச்‌சண்டை போட்டியில், உலக சாம்பியன்சிப்பில் பதக்கம் வென்ற சோனியா லெதர், சிம்ரன்ஜித் கௌர் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

இதில் சோனியா லேதர் 5-0 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் சலோனி சிங்கை வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

பஞ்சாப் வீராங்கனை சிம்ரன்ஜித் கௌர் 64 கிலோ எதைப் பிரிவில் ஹிமாசல பிரதேச விராங்கனை சந்தியாவை 5-0 என்ற கணக்கில் வென்றார்.

அதேபோல், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற பிங்கி ஜங்ரா, மனீஷா மௌன் ஆகியோரும் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இதில் 51 கிலோ எடைப் பிரிவில் ஹிரியாணா வீராங்கனை பிங்கி ஜங்ரா, தில்லி வீராங்கனை பிரதீபாவை வீழ்த்தினார்.

54 கிலோ பிரிவில் மினிஷா5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மற்றோரு தில்லி வீராங்கனை ரியா டொகாசை வென்றார்.

தெலங்கானாவின் நிகத் ஜரீன் 51 கிலோ பிரிவில் ஆந்திர பிரதேசத்தின் லிகிதா பட்டினியை 5-0 என்ற கணக்கில் வென்றார்.

தெலங்கானாவின் நிகத் ஜரீன் 51 கிலோ பிரிவில் ஆந்திர பிரேதேசத்தின் லிகிதா பாட்டினியை 5-0 என்ற கணக்கில் வென்றார்.

கர்நாடகத்தின் பவ்யா-தெலங்கானாவின் பிரசன்னா லசாமியை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

48 கிலோ பிரிவில் அகில இந்திய போலீஸ் அணியின் பீனா தேவி 5-0 என தில்லியின் குஷ்பு டோகாசை வெற்றி பெற்றார்.