
Womens World Boxing Championships : 10-வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அரையிறுதி போட்டியில் கொரியா நாட்டை சேர்ந்த கிம் ஹியாங் மி உடன் மோதினார் மேரி கோம்.
போட்டியின் தொடக்கம் முதல் மேரி கோம் சிறப்பாக செயல்படுவே, இருந்த ஐந்து நடுவர்களும் ஒரு மனதுடன் மேரி கோம்மை வெற்றியாளராக தெரிவித்தனர்.
இதுவரை உலக குத்து சண்டைப் போட்டிகளில் 5 தங்கம் மற்றும் வெள்ளி பெற்றுள்ள மேரி கோம், முன்னதாக 5 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் பெற்று இருந்த அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லரின் சாதனையை முறியடித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை மேரி கோம் இறுதி போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவுடன் மோத இருக்கின்றார்.
இந்த இறுதி போட்டியில் மேரி கோம் வெல்லும் பட்சத்தில் இன்னும் நிறைய சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.