Womens Vote
Womens Vote

Womens Vote – சென்னை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதியுடன் , 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், அக்டோபர் மாதம் இறுதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, தேர்தல் அலுவலர்கள் களஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில், இதுவரை மொத்தம் 13,96,326 பேர் பெயர் சேர்க்க, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில் 2,19,392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தற்போது வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிகள் முடிந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ‘தமிழகத்தில் 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்கள்!! உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்’ .

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி சென்னையில், மாநகராட்சி ஆணையர் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 37,91,126 என்றும், ஆண்கள் 18,83,989 என்றும், பெண்கள் 19,34,078 என்றும், மூன்றாம் பாலினத்தவர் 932 என்றும் பட்டியலில் வெளியாகியுள்ளது.

சென்னையை பொருத்த வரையில், பெண் வாக்காளர்களே இம்முறை அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.