Women's T20 World Cup
Women's T20 World Cup

Women’s T20 World Cup – மகளிர் டி-20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

அதனால் மனம் உடைந்த மிதாலி ராஜ் பிசிசிஐ-யிடம் பயிற்சியாளர் ரமேஷ் பவார், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்து இருந்தார்.

பிசிசிஐ குழு இந்த புகாரை விசாரிகையில், ஓபனராக களம் இறக்காவிட்டால் போட்டியில் இருந்து விலகுவேன் என மிதாலி கூறியதாக பயிற்சியாளர் பாவர் தெரிவித்திருந்தார். இதனால் இந்திய மகளிர் அணியில் குழப்பம் உருவாகி உள்ளது.

அதோடு நவம்பர் 30-ஆம் தேதியுடன் பயிர்சியாளர் ரமேஷ் பாவரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

இந்த விவகாரம் காரணமாக அவருக்கு பணி நீட்டிப்பு தரவில்லை. மற்றும் இந்த பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ கூறி இருந்தது.

இந்த நிலையில் பயிற்சியாளர் பாவர் பணியில் நீடிக்க வேண்டும் என கேப்டன் கவுர், ஸ்மிருதி ஆகியோர் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளனர். மற்றும் மிதாலி ராஜ் நீக்கத்திற்கு பாவர் மட்டுமே காரணம் இல்லை.

நான், ஸ்மிருதி மேலும் தேர்வாளர் சுதா ஆகியோரும் சேர்ந்து எடுத்த முடிவு அது என கேப்டன் கவுர் அந்த கடித்ததில் தெரிவித்து இருந்தார்.

அதோடு, பயிர்சியாளர் பவார் தலைமையில் அணி மேலோங்கி வருகின்றது இப்பொழுது பயிற்சியாளரை மாற்றினால் மிகவும் கடினமாகிவிடும் என்றும்,

மேலும் மிதாலி ராஜ் நீக்கியதற்கு எந்த சொந்த காரணங்கலும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த பிரச்சைனையை ஒன்றாக அமர்ந்து தீர்வு காண வேண்டும் என்றும், அதுவே அணிக்கு சரியான விழிப்புணர்வும், பாதுகாப்பு உணர்வும் ஏற்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதே நேரத்தில் பவார் அவர்களுக்கு எதிராக மிதாலி ராஜ், ஏக்தா பிஷ்த், மான்ஸி ஆகியோர் தொடர்ந்து எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இந்திய மகளிர் அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. எது எப்படியாகினும், டிச-14 பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.