Women stopped Sabarimala Temple
Women stopped Sabarimala Temple

Women stopped Sabarimala Temple – திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 2 ஆம் தேதி இரண்டு இளம்பெண்கள் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ததால் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தொடங்கிய வன்முறை இன்னும் அங்கு அடங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு இளம்பெண் சபரிமலை சென்றுள்ளார்.

சபரிமலைக்கு நேற்று முன்தினம் மாலை இலங்கை மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் இருந்தார். அவரை நிலக்கல்லில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என தெரிவித்த அந்த இளம்பெண்ணிடம், நிலைமை மோசமாக இருப்பதால் அனுமதிக்க முடியாது என போலீசார் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இளம்பெண் மட்டும் தரிசனத்திற்கு செல்லவில்லை.

இந்த செய்தியால் சபரிமலையில் பெரும் ஆர்பாட்டம் நிலவியது . மேலும் நேற்று அதிகாலை கோழிக்கோடு அருகே உள்ள கொய்லாண்டியில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜ தலைவர்களின் வீடுகள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கொய்லாண்டியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் நகராட்சி கவுன்சிலர் ஷிஜூ வீட்டில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்டது.இது யாருடைய செயல் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதில் வீட்டின் முன்பக்க ஜன்னல் கண்ணாடிகள் நெறுங்கின. இதேபோல் இப்பகுதியில் உள்ள பாஜ மாவட்ட செயலாளர் முருகந்தன் வீட்டிலும் 5 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்டது.

இதிலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நெறுங்கின. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் கொய்லாண்டியில் பதற்றம் நிலவியது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், 48 வயதான தமிழ் பெண் ஒருவர் தரிசனம் செய்ததாக தற்போது தகவல் பரவியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த சிங்காரி என்ற 48 வயதான பெண் ஒருவர் சபரிமலையில் நேற்று முன்தினம் மாலை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் அவர் நேற்று முன்தினம் தரிசனம் செய்தாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவர் தனது கணவர் சீனிவாசன் மற்றும் மகனுடன் வந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் வந்து சென்றது தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் அவர் தரிசனம் செய்தாரா, இல்லையா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்ந்து இவ்வாறு சபரிமலையில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் ஏற்பட்டு வருவதால் சபரிமலையில் அமைதி நிலைகுலைந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here