Women Cricket Team
Women Cricket Team

Women Cricket Team – இந்தியா – இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோட்ரிக்ஸ் ரன் எடுக்காமல் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மிரிதி மந்தனா உடன் பூனம் ரவுத் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மந்தனா 66 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பூனம் 56 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் நைட் 47 ரன்களும், வியாட் 56 ரன்களும் அடிக்க 48.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்து இரண்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்பே தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு இது சிறிது ஏமாற்றம் என்றாலும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்ற இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி சற்று ஆறுதலாக இருந்து இருக்கும்.