ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு சதுர அடி நிலம் வாங்கிய மாநாடு பிரபலத்திற்கு அந்நாடு பட்டம் ஒன்றைக் கொடுத்துள்ளது.

Wishes to Maanadu Editor : தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர் வலம் வருபவர் பிரவீன் கே எல். வெங்கட் பிரபு படங்களுக்கு தொடர்ந்து படத்தொகுப்பாளராக பணியாற்றிய வரும் இவரது படத்தொகுப்பு மாநாடு படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு படங்களில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு சதுர அடி நிலம் வாங்கியுள்ளார். இதற்காக நாடு பிரவீனுக்கு லார்ட் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. மேலும் இவர் வாங்கி இல்ல இடத்தில் அவரது பெயரில் ஒரு மரம் வளர்ப்பார்களாம். இந்த பட்டத்தை அவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.