Wimbledon Tennis : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News,Novak Djokovic
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் பெடரரை தோற்கடித்து, செர்பியாவின் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்!

Wimbledon Tennis :

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் பெடரரை சந்தித்தார்.

பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் முதல் செட்டை ஜோகோவிச் 7 – 6 என போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டை பெடரர் 6 – 1 என எளிதாக கைப்பற்றினார். மீண்டும் எழுச்சி பெற்ற ஜோகோவிச், மூன்றாவது செட்டை 7 – 6 என வசப்படுத்தினார். நான்காவது செட்டை பெடரர் 6 – 4 என தனதாக்க, போட்டியில் விறுவிறுப்பு அதிகாரித்தது.

கடைசி செட்டில் இரண்டு வீரர்களும் போராடினர், இதில் ஜோகோவிச் 13 – 12 என வென்றார். நான்கு மணி நேரம் 55 நிமிடம் நீடித்த மாரத்தான் போட்டியில், ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை தட்டி சென்றார்.

பிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா? மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும் இது தான் காரணமா? – புகைப்படத்துடன் இதோ.!

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக (2018, 19) சாம்பியன் பட்டத்தை ஜோக்கோவிச் கைப்பற்றினார். விம்பிள்டன் தொடரில் ஐந்தாவது முறையாக பட்டத்தை வசப்படுத்தினார்.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில், ஜோகோவிச் (16, ஆஸ்திரேலியா-7, பிரெஞ்ச்-1, விம்பிள்டன்-5, யு.எஸ்., ஓபன்-3) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிரண்டு இடங்களில் முறையே சுவிட்சர்லாந்தின் பெடரர் (20), ஸ்பெயினின் நடால் (18) உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் ஜூனியர் பிரிவு இறுதி போட்டியில் ஜப்பானின் ஷின்டரோ 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் கார்லோசை தோற்கடித்தார்.

இதன் மூலம், இப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமைஐ பெற்றார். இதற்கு முன், பெண்கள் ஜூனியர் பிரிவில் கசுகோ 1969-ல் பட்டம் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.