அஜித்திற்கு தங்கையாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற படம் இன்று வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லி இருந்தார். அஜித்துக்கு தங்கையாக நடிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு தங்கையாக அல்ல ஜோடியாக நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.