மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தற்போது பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து நேரில் உரையாற்றி வருகிறார்.

தற்போது, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இதில் சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது, ” மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து கட்சிகளும், கல்லூரியில் அரசியல் பேசினாலும் தவறில்லை.

சபரி மலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவதின் மூலம் சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் பட்சத்தில் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிடும். மேலும் திமுக , அதிமுக ஆட்சியை அரசியலில் இருந்து நீக்க மக்கள் நீதி மய்யம் பாடுபடும், மேலும் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது ” இவ்வாறு கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.