Will Rashi Kanna sentiment work out for Ayogya?
Will Rashi Kanna sentiment work out for Ayogya?

ராஷி கண்ணாவின் போலீஸ் படங்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அதே செண்டிமெண்ட் அயோக்யா படத்துக்கும் கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Will Rashi Kanna sentiment work out for Ayogya? – வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் பல தடைகளைக் கடந்து நேற்று திரைக்கு வந்துள்ளது.

இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இவர் இதற்குமுன்பு தமிழில் நடித்த இமைக்கா நொடிகள், அடங்க மறு ஆகிய இரண்டு படங்களும் போலீஸ் படங்கள்.

அந்த படங்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அதே செண்டிமெண்ட் அயோக்யா படத்துக்கும் கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.