viral video
சந்தேகப்பட்டு தனது செல்போனை முகத்தால் லாக் செய்த கணவனை மனைவி புரட்டி எடுத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

Wife beat husband as unlock her cellphone with face – தற்போது எல்லோரும் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. கணவன் மனைவி ஆகியோர் தனித்தனியாக செல்போன் வைத்துள்ளனர். கணவன் மனைவி ஆனாலும் இருவருக்கும் தனி சுதந்திரம் தேவைப்படுகிறது. ஆனால், இதை கணவனோ, மனைவியோ புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ளும் போது பிரச்சனை எழுகிறது. வெளிநாடுகளில் இது விவாகரத்து வரைக்கும் கூட சென்று விடுகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக பார்டி செய்யும் ராஷ்மிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், மனைவியின் செல்போனை பேஸ் ஐடி (தனது முகத்தின்) மூலம் லாக் செய்து விடுகிறார். செல்போனை பார்க்கும் மனைவி இதை கண்டுபிடித்து விடுகிறார். எனவே, செல்போனை கணவனின் முகத்திற்கு நேராக காட்ட, அவர் முகம் காட்ட மறுக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த மனைவி அவரை விரட்டுகிறார். ஆனாலும், அவரின் கணவர் முகத்தை காட்டாமல் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறார். அதன்பின் ஒருவழியாக முகத்தில் காட்டி தனது செல்போனை அன்லாக் செய்து விட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.