தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய அரசியல் பேச்சுகள் தான் தமிழகத்தின் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரையும் தாண்டி அரசியல் பிரமுகர்களும் விஜயின் பேச்சை தான் அசை போடுகின்றனர். பலரும் விமர்சனமும் கிண்டலும் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவரான தமிழிசை சௌந்தராஜன் விஜய் குறித்து கேள்வி கேட்டதற்கு நடிகர்கள் தான் அரசியலில் நடிக்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் உண்மையானவர்களாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

விஜயை பற்றி பேசி படத்தை ஓட வைக்கணுமா? - பிரபலத்தின் நக்கல் பேச்சு.!

மேலும் விஜயை பற்றி நான் எதாவது பேசி அவருடைய சர்கார் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என கூறி கருத்து கூற மறுத்துள்ளார். நீங்க பேசி தான் எங்க தளபதி படம் ஓடணுமா என்ன? என தளபதி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.