பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர். ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, பாலாஜி, விஜயலக்ஷ்மி என பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 6 பேர் உள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து தப்பித்து வரும் ஐஸ்வர்யா இந்த வாரமாவது வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பாலாஜி, விஜயலக்ஷ்மி மற்றும் யாஷிகா ஆகியோரில் இருவர் தான் வெளியேறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.