தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள 68 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மட்டுமல்லாமல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமன்னா மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க போவது யார் என்பது பற்றியும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் உடன் இணைந்து மெர்சல் படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா தான் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது மட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பதால் மீண்டும் விஜய்க்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.