தமிழக பாஜக தலைவராக அடுத்து யார் நியமிக்கப்படவுள்ளார் என்கிற செய்தி பாஜக வட்டாரத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

A.P.Muruganandam next bjp leader  – தமிழக பாஜக தலைவராக செயலாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு பின் யார் தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், ஏ.பி.முருகானந்தம் என பலரின் பெயர் பாஜக தலைவர் பதவிக்கு அடிபட்டு வருகிறது.

இதில் ஏ.பி.முருகானந்தம் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இவர் தற்போது தேசிய பாஜக துணை தலைவராக இருக்கிறார். மேலும், தேசியப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். மோடி மற்றும் அமித்ஷாவிடம் இவருக்கு நற்பெயர் இருப்பதால் அவருக்கே இந்த பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு எதிராக களமிறங்கும் சிவகார்திகேயன்.?

மேலும், மற்றவர்களை ஒப்பிடும் போது ஏ.பி.முருகானந்தம் இளமையானவராக இருப்பதால் அவரையே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.