
யார் அந்த ஜீவானந்தம் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.
திருசெல்வம் இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் குணசேகரன் நாப்பது சதவீத ஷேருக்காக அதிரையை அருணுக்கு கல்யாணம் செய்து தருவதாக சொல்லி அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கி அனைவரையும் ஏமாற்றினார்.

இதனால் அப்பத்தா உடம்பு சரியில்லாமல் கோமா ஸ்டேஜுக்கு சென்றுள்ள நிலையில் அவ்வபோது அவருக்கு சுய நினைவு வரும் போதெல்லாம் அவர் சொல்லும் பெயர் ஜீவானந்தம்.
இதனால் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தரவுகளை புரட்டிப் போட உள்ள அந்த ஜீவானந்தம் யார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது.
இது நிலையில் தற்போது அந்த ஜீவானந்தம் இயக்குனர் திருசெல்வம் தான் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாக கொடுத்த ஹைப்புக்கு தப்பே இல்லை என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இனிமே தான் இந்த சீரியல் இன்னும் சூடு பிடிக்கப் போவது, ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என பாராட்டி வருகின்றனர்.