White Hair Problem & Solutions :
White Hair Problem & Solutions :

White Hair Problem & Solutions :

உங்களுக்கு நரைமுடி உள்ளதா? கவலை வேண்டாம்! நரை முடியை கருமையாக்க எளிமையான டிப்ஸ் இதோ!

* இளம் வயதில் நரை முடி ஏற்பட காரணங்கள்#
1. பரம்பரை ரீதியாக நரைமுடி ஏற்படுதல்.
2. தைராய்டு சுரப்பி பாதிப்பால்
3. ரத்தசோகை நோயால்
4. விட்டமின் டி குறைபாடு
5. மெலானின் சுரப்பி குறைவாக சுரத்தல்.

நரை முடியை கருமையாக்க உதவும் மருத்துவ குறிப்புகள்:

1. ஒரு டேபிள்ஸ்பூன் தேயிலை பொடியை ,சுடு நீருடன் கலந்து இரண்டு மூன்று சொட்டு எலுமிச்சை பழச்சாறு விட்டு நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை தலையில் நன்றாக மசாஜ் செய்து ,அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

2. ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு கொத்து மருதாணி .இவற்றை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

3. 2 டேபிள்ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடி ,ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடி ,இவற்றுடன் மூன்றிலிருந்து ஐந்து சொட்டுகள் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலக்கவும். கலந்த கலவையை தலையில் நன்றாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.

4. மேலும் ,இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் ,தலை முடி ஆரோக்கியமாகவும், நரைமுடி கருமையாக மாறும்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here