Wheat Sweet :

தேவையான பொருட்கள் :

1. கோதுமை மாவு – ½ கப்

2. சர்க்கரை – ½ கப்

3. பால் – 1 கப்

4. நெய் – தேவைக்கு

5. ஏலக்காய் – 5

6. எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

அடுப்பில் ஒரு பத்திரம் வைத்து அதில் பால் ஊற்றி கூடவே சர்க்கரை மற்றும் கோட்டை நீக்கிய ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இது செய்யும் பொது நெருப்பு குறைத்து வைத்து செய்வது முக்கியமானது.

பால் கொதி வந்தவுடன் அதில் கோதுமை மாவை மெதுவாக அடிபிடிக்காமலும், கெட்டியாகமலும் கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

பாத்திரதில் ஒட்டாமல் வரும் வரை கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாத்திரதில் ஒட்டாமல் வரும் போது அதில் சிறிது நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.

பிறகு, கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு சூடு தணிந்து இருக்கும் கோதுமை கலவையை வடை போல தட்டி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் எளிமையான கோதுமை ஸ்வீட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here