
Whatsapp Update : இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதோர் என்று யாருமே இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் வாட்ஸ்அப் செயலியை அந்நிறுவனம் அடிக்கடி அப்டேட் செய்து பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய வசதி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ” பிரைவேட் ரிப்ளே ” என்ற புதிய வசதியை வழங்கவுள்ளது. இந்த வசதியை தற்போது பீட்டா வெர்ஷனில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, ஒரு குரூப்பில் மெசேஜ்க்கு ரிப்ளை செய்யும் போது அனைவரும் அந்த மெசேஜை பார்க்க முடியும்.
இந்த ” பிரைவேட் ரிப்ளே ” வசதி மூலம் நாம் யார் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமோ , குறிப்பிட்ட அந்த ஒரு நபருக்கு மட்டும் ரிப்ளை செய்ய முடியும்.
குரூப்பில் உள்ள மற்ற யாரும் அந்த மெசேஜை பார்க்க முடியாது. தற்போது இந்த வசதி பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
பரிசோதனைக்கு பின், அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இந்த வசதி தரப்படும். அதுமட்டுமின்றி, மேலும் ‘ வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும் ‘ என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.