What can a newborn baby do?
What can a newborn baby do?

▪ பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. மேலும் இவர்களுக்கு பிறந்து மூன்று மாதங்களில்தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும். எனவே அவர்களுக்கு கண்ணீர் வராது.

▪ பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்தி விடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போது தாயின் குரல், தாயின் அன்பு மற்றும் ஸ்பரிசம் ஆகியவற்றை குழந்தை உணர்ந்து கொள்ளும்.

▪ பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும் சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காணமுடியும்.

▪ ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரியவந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட ஒருவரின் முகத்தை காண பிடிக்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரை காணும் போது புன்னகைகின்றன.

▪ பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

▪ சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். ஆனால் பிறந்த குழந்தைகளின் உடலில் 270 எலும்புகள் இருக்கும். அவன் வளர வளர மண்டையோடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகள் ஆகியன.

▪ குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்ந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here