Weight Reduce After Delivery
Weight Reduce After Delivery

Weight Reduce After Delivery

பிரசவத்தால் அதிகரித்த எடையை இயற்கையாகக் குறைக்கும் வழிகள்!

பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு, உடல் எடை அதிகரிக்கும். பிரசவத்தின்போது ஏற்பட்ட பலவீனத்தைப் போக்குவதற்காக நிறைய உணவுகளைக் கொடுப்பார்கள். அதுவும் உடல் எடையை அதிகரிக்க முக்கியக் காரணமாகிறது.

எடையை இயற்கையாகக் குறைக்கும் வழிகள்:

1) உட்கார்ந்து எழுதல், படுத்திருந்தபடி காலை தூக்குதல் போன்றவை வயிற்றுத் தசைகளை இறுகச் செய்யும் உடற்பயிற்சிகளாகும்.

2) அன்னாசி, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

3) புரோட்டீன் உணவுகள், நீர்ச்சத்துள்ள உணவுகள்(அவகேடோ, கிர்ணிப் பழம், பப்பாளி, தர்பூசணி), சோயா வகைகள், சிவப்புநிற பழங்கள், பச்சை நிறக் கீரைகள் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

4) 100 மில்லி வெதுவெதுப்பான நீருடன் 100 மில்லி இஞ்சிச்சாறு, இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

5) டீ, காபி அருந்துவதை நிறுத்துவது நல்லது. கேரட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

6) நாம் சாப்பிடும் உணவில் சீரகம், கடுகு, மஞ்சள், வெந்தயம், துளசி, லவங்கம் (கிராம்பு), பூண்டு ஆகியவற்றை அதிகமாகச் சேர்க்க வேண்டும். இது, உடலிலுள்ள கொழுப்புகளைக் கரைக்கும்.

7) தாய்ப்பால் கொடுப்பதால் 500 கலோரிகள் எரிக்கப்படும்.

8) மைதா, அயோடின் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிர்ந்த நீர், பாக்கெட் உணவுகள், செயற்கை பழச்சாறுகள், ரெடிமேடு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

9) தினமும் காலை, மாலை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை, வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. நாள் முழுவதும் சீரகத் தண்ணீர் குடித்தால் தொப்பைக் குறையும்.

10) எலுமிச்சை, புதினா ஜூஸ், வெள்ளரிக்காய், காலிஃபிளவர், காளான், அவரைக்காய், பீன்ஸ், முட்டைகோஸ், புரோக்கோலி, கிரீன் டீ அருந்துவதும் சதையைக் குறைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here