Weight Loss Tips
Weight Loss Tips

Weight Loss Tips

உங்கள் எடை குறைய வேண்டுமா? பீர்க்கங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

விட்டமின் பி2, விட்டமின் சி, கரோட்டின், நியாசின், இரும்புச்சத்து, சிறிதளவு அயோடின் மற்றும் புளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.

* மண்ணீரலின் வீக்கத்தை தணிக்க வல்லது. மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது.

* ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இருமலைப் போக்க வல்லது. ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லது.

* பீர்க்கங்காயின் விதைகள் வாந்தியைத் தூண்டக் கூடியது. சளியை உடைத்துக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது.

* எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம்.

* சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, கட்டினால், இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.

* பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here