Weather Report
Weather Report

Weather Report – சென்னை: “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை, இம்முறை இயல்பைவிட 12% மழை குறைவு” என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 2மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது, “தென் தமிழகத்தை ஒட்டி உள்ள வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலவி வருகிறது.

மேலும், மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்” எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், அக்.1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்ய கூடிய பருவமழையின் அளவு,

இயல்பைவிட 12% மழை குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இயல்பாக பெய்ய வேண்டிய 35 செ.மீ மழைக்கு மாறாக 31செ.மீ மழை தான் பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மற்றும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.