Wearing a Helmet leads to Hair Loss : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

 Wearing a Helmet leads to Hair Loss :

* ஹெல்மெட் அணிந்து கொள்வது நம் உயிருக்கு பாதுகாப்பான கவசமாகும். சிலருக்கு, நீண்டநேரம் ஹெல்மெட் அணிவதால் கழுத்துவலி, தலைவலி, வியர்வையால் தலையில் அழுக்கு சேர்தல், தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

ஹெல்மெட் அணிவதால் வரக்கூடிய பிரச்னைகளைப் போக்கும் வழிமுறைகள்:

1) முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்தபின் குளித்தால் உடல் சூடு குறைவதோடு, தலையில் தேங்கியுள்ள அழுக்குகள் நீங்கும்.

பற்களின் கறை மறைந்து, வெண்மையாக வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்:

2) வேப்பிலைகளை விழுதாக அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர வேப்பிலையில் உள்ள கசப்புத்தன்மை தலையினுள் படிந்துள்ள பாக்டீரியாவை அழிக்கும்.

3) தயிரைத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து, குளிக்கலாம்.

4) மாம்பழத்தின் கொட்டையிலிருக்கும் பருப்பை அரைத்து தலையில் தேய்த்துக்குளிக்க வியர்வை காரணமாக தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

5) கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து, தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

6) திரிபலா மூலிகை கஷாயத்தைக் கொண்டு தலையை அலசி குளிக்கலாம்.

7) வில்வ இலைகளுடன் துளசி அல்லது நொச்சி இலைகளைச் சேர்த்து தண்ணீரில் கொதிக்கவைத்து அதில் குளிக்கலாம்.

8) தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் சீரகத்தைச் சேர்த்து இரண்டு நாள்கள் சூரிய ஒளியில் வைத்து, பிறகு எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளிக்க நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here