Water Melon Juice :
Water Melon Juice :

Water Melon Juice :

உடலின் சூடு குறைக்க பெரும்பாலும் இளநீர் பருகுவார்கள். அதே போல தர்பூசணி பழத்தை ஜூஸ் போட்டு பருகினால் உடலுக்கு குளிர்ச்சி தரும் மற்றொரு சுவையான ஜூஸ் தயார்.

தேவையான பொருட்கள் :

1. தர்பூசணி – 200 கிராம்

2. சப்ஜா விதை – 1 ஸ்பூன்

3. எலும்பிச்சை சாறு – ½ ஸ்பூன்

4. சர்க்கரை – தேவைக்கு

5. புதினா இலை – சிறிது

செய்முறை :

சாப்ஜா விதையை வெண்ணீரில் போட்டு சுமார் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், தர்பூசணி பழத்தை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேவையானக அளவிற்கு சர்க்கரை மற்றும் சிறுது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு, அதனுடன் ஊற வைத்துள்ள சப்ஜா விதை மற்றும் சிறிது புதினா போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது டம்ப்ளரில் ஊற்றி பருகினால் குளிர்ச்சியான தர்பூசணி பழ ஜூஸ் தயார்.

இதனை பருகி வர உடல் புத்துணர்ச்சி தரும். முகம் பொலிவு அடையும். மேலும், இதனை இரு நாட்களுக்கு ஒரு முறை பருகி வர வயிறு எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here