benefits of drinking water
benefits of drinking water

benefits of drinking water : தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும், என்று தெரியுமா உங்களுக்கு?

☆ தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தண்ணீர் நமது உடலை சீரான முறையில் இயக்க முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

சரியான இடைவெளியில் நீரை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டால் உடல் பாகங்களின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட துவங்கும். பல நேரங்களில் தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகளை தடுக்கலாம்.

☆ தினசரி நீரின் அளவு;

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையும், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை சரியான நேரங்களில் கொடுத்து வந்தால், இன்னும் சிறந்த பலன்களை பெறலாம்.

☆ தேநீர்க்கு (காபி மற்றும் டீ) முன்:

காபி மற்றும் டீயில் pH அளவானது 5 மற்றும் 6 ஆக உள்ளது. இவை உடலில்
அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அல்சரை ஏற்படுத்தும். அதனால் டீ அல்லது காபி குடிப்பதற்கு முன் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்தால், இப்பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

☆ குளிப்பதற்கு முன்:

குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும். ஆனால் சுடுநீரில் குளிக்கும் முன் குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

☆ காலை எழுந்தவுடன்:

காலையில் எழுந்தவுடன், முகத்தை கழுவிய பின் இரண்டு டம்பளர் தண்ணீர் குடிப்பதால், உடல் உறுப்புகள் சீராக செயல்படும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

☆ உணவிற்கு முன்:

ஒவ்வொரு முறை உணவு உண்ணும் 1/2 மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் சீராக நடைபெறுவதோடு, உண்ணும் உணவின் அளவு குறைந்து, உடல் எடையையும் குறைக்கலாம்.

☆ படுக்கைக்கு முன்:

தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

☆ உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின்: உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் தண்ணீர் குடிப்பதால், உடற்பயிற்சியினால் வறட்சியடைந்த உடல் உறுப்புக்கள், சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

☆ காலை வேளையில் அதிகமாக நீர் பருகுங்கள், இதனால் உங்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

☆ மாலை வேளைகளில் குறைவாக நீர் பருகுங்கள், இது இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் வரும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here