Wate Drinking
Wate Drinking

Water Drinking :

நின்று கொண்டே தண்ணீர் குடித்தால் ஆபத்தா?

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்!

● நம்மில் பலருக்கு நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது.

● தண்ணீரை, நாம் உட்கார்ந்து பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால், உடலில் உள்ள ஆசிடிட்டி அளவு நீர்த்து போகும் மற்றும் உடலுக்குள் சரியான கலவையில் நீரானது சென்று உடலை புத்துணர்ச்சியோடு வைக்கும்.

● தண்ணீரை அண்ணாத்திக் குடிப்பதை தவிர்ப்பதும் மிகவும் நல்லது.

● நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக வேகத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்து நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.

(1) ஹெர்னியா:

நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதிக வேகத்துடன் சென்று ஹெர்னியா எனப்படும் நோயை ஏற்படுத்தும்.

(2) ஆர்த்ரிடிஸ்:

சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் அருந்தினால், உடல் திரவங்கள் பாதிக்கப்பட்டு நமது கால் மூட்டு பகுதியை பாதித்து வலியை ஏற்படுத்தும். நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும் என்று கூறப்படுகின்றன.

(3) சிறுநீரக பாதிப்பு:

தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்.

(4) நரம்புகள், இதயத் துடிப்பு :

பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பித்து இதயத் துடிப்பு அதிகமாகும். இதனால் நரம்புகள் இதயத்துடிப்பு பாதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here