Protect your heart :
Protect your heart :

Protect your heart :

உங்கள் இதயத்தை பாதுகாக்க வேண்டுமா? இதோ இதயத்தை பாதுகாக்க உதவும் உணவுகள்.

* உலர்ந்த பீன்ஸ், ஆரஞ்சு பழங்கள், கீரைகள் இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* மீனில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு பலத்தை அளிக்கிறது.

* நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* கடலை பருப்பு ,பாதாம் இவற்றில் இதயத்திற்கு பலத்தை அளிக்கும் நல்ல கொழுப்புகள் உள்ளன..

* எண்ணெயில் பொரித்தஉணவுகள், கோழியின் தோல் பகுதியை இவற்றை உண்பதை தவிர்க்கலாம்.

* அதிக உப்புத்தன்மை கொண்ட ஊறுகாய், அப்பளம், கருவாடு இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

* அன்றாடம் மாதுளம் பழச் சாறை அருந்தலாம். இவை ரத்தக் குழாய்களில் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்கிறது மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

* பூண்டு, உலர்ந்த திராட்சை இவை இதயம் பலமாக்க உதவுகிறது.

* பாக்கெட் மற்றும் கண்டெய்னரில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

* தினமும் அரை மணி நேரமாவது யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

* குறைந்தது அரைமணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்வது இதயத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

* மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமான மனதுடன் இருத்தல் அவசியம்.
இதயத்தை பாதுகாக்க உதவும் மருத்துவ குறிப்புகள் :

1. வெண் தாமரை மலரின் இதழ்களை பொடி செய்து, தேனில் கலந்து அருந்தி வர இதயம் பலம் பெறும்.

2. இஞ்சிச் சாறை, தேனுடன் கலந்து வாரம் மூன்று முறை அருந்தி வர இதயம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் குணமாகும். வயிற்றுப் புண் இருப்பவர்கள் இஞ்சிச் சாறு அருந்த வேண்டாம்

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here