சமீப காலமாக பல படங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் தலைப்பு கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். இந்த படத்தில் வனிதா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் பாட்டு வெளியிட்டு விழாவின் பொழுது பவர் ஸ்டாரும் வனிதாவும் மாறி மாறி கிண்டல் அடித்துக்கொண்டது மிகவும் வைரலாக பரவியது.
இந்த படத்திற்கு இசை அமைத்தது மட்டும் இன்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார் மாபெரும் ஜாம்பவான் சங்கர் கணேஷ் அவர்கள். இந்த படத்தில் உள்ள ஒரு காட்சியில் தான் வனிதா சங்கர் கணேஷ் அவர்களை விசாரணை செய்யும் காட்சியில் ரோஸ் மில்க் சாப்பிடலாமா?.. என்று கேட்கும் வண்ணம் காட்சியை அமைத்திருக்கிறார்கள் இந்த பட குழுவினர். இந்த படத்தில் மேலும் இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஜென் சினிமாஸ், திரு கே பி தினகரன் அவர்கள் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜு இயக்கியுள்ளார். இந்த படத்தை 2எஸ் என்டேர்டைன்மெண்ட், திரு எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார். இவர் பவர் ஸ்டார் மற்றும் வனிதா நடித்து வரும் பிக்கப் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.