ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் நடிகர் விஷாலின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் வீரமே வாகை சூடும் படத்தின் முதல்பாதி விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

VVS Movie Twitter Review : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையை கொண்டு வலம் வரும் விஷால் அவர்களின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் து பா சரவணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும்.

தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள், நடிப்பில் மிரட்டும் விஷால் - வீரமே வாகை சூடும் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது படத்தைப் பார்த்து ரசிகர்கள் முதல் பாதி குறித்து விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள், நடிப்பில் மிரட்டும் விஷால் - வீரமே வாகை சூடும் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.