VVR Teaser Tweet

VVR Teaser Tweet : சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் டீஸர் 11 மணிக்கு வெளியாக

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் AAA படத்தால் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் மஹத் மற்றொரு ஹீரோவாக நடித்துளளார்.

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், மஹத்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு அதனை லைகா நிறுவனம் யூ ட்யூபில் இருந்து நீக்கி விட்டது.

அதன் பின்னர் யூ ட்யூபில் ஏற்பட்ட பிரச்சனையால் டீஸர் நீக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் மீண்டும் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.