VTV Ganesh About STR Marriage
VTV Ganesh About STR Marriage

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவர் மணந்து கொள்ள போகும் பெண் யார் என்பது குறித்தும் விடிவி கணேஷ் தெரிவித்துள்ளார்.

VTV Ganesh About STR Marriage : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு. சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வருகிறார்.

விஜய்க்கு முன்பாக இளைய தளபதியாக இருந்தவர் இவர் தான் – புகைப்படத்துடன் தெரியாமல் ஷாக்கிங் தகவல்!

சிம்பு முதலில் நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் பிரேக் அப் ஆனது. அதன்பிறகு ஹன்சிகாவை காதலிக்கிறார் அதுவும் பிரேக் அப் ஆனது.

இதையடுத்து காதலே வேண்டாம் என இருந்து வரும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இன்னும் பெண் கிடைத்ததாக இல்லை. இதன் காரணமாக அவரின் அம்மா உறவுக்கார பெண் ஒருவரை சிம்புவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பழைய கார் FCக்கு போயிட்டு வந்து இருக்கு அதான் இப்படி.. மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ – கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் விடிவி கணேஷ் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விரைவில் சிம்புவிற்கு திருமணம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.