வெந்து தணிந்தது காடு படம் பற்றி புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

VTK Shooting Wrapped : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது அவை முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்று வருகிறது.

ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவில் தொடங்கி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.