நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிரபல OTT நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் கடந்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபல OTT தளத்தில் வெளியான VTK திரைப்படம்!!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லவரை பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை அமேசான் ஓடிடி நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.