வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஓபெலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி அதிக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த பாடலாக இடம் பெற்றிருந்த “மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது” பாடல் தற்போது இணையதளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து வைப் செய்து வருவதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.