நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகிய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கவுள்ளது.

வெந்து தணிந்தது காடு… மேக்கிங் வீடியோ வைரல்!!.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் படக்குழுவினர்கள் இப்படத்தில் நடித்ததை பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vendhu Thanindhathu Kaadu - Making Video #1 | Silambarasan TR | Gautham Vasudev Menon | A.R. Rahman