நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சித்தி இட்னானி தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சித்தி இட்னானி விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜீ ஸ்டுடியோ நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் அக்‌ஷய் கேஜ்ரிவால் கூறும்போது, ‘இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறோம். ஆர்யா, இயக்குநர் முத்தையா கூட்டணி, சிறந்த பொழுதுபோக்கு படத்தை வழங்கும் என்பது உறுதி” என்று கூறியிருக்கிறார்.