VRV Surprise

VRV Surprise : நாளை வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ஒன்று காத்துக் கொண்டுள்ளார். ஆனால் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

சிம்புவுடன் மோதும் 3 படங்கள் – பிப்ரவரி 1 ரிலீஸ் லிஸ்ட்.!

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோரும் நடித்துள்ளனர். சிம்பு ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாளை அதிகாலை 5 மணிக்கு இப்படத்தை திரையிட படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் தற்போது மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் நாளை காசி, ரோகினி சில்வர் ஸ்கிரீன், ஜி.கே சினிமாஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் சிம்பு வருகை தர உள்ளாராம்.

இதனால் இந்த தியேட்டர்களில் படம் பார்க்க உள்ள ரசிகர்ளுக்கு மற்றொரு சர்ப்ரைஸாக சிம்புவை பார்க்க வாய்ப்பு உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.