Pongal Race 2019

VRV Release :

பொங்கல் ரேஸில் இருந்து வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் நெட்டிசன்கள் கண்ட கதையை திரித்து வருகின்றனர்.

தீபாவளி, பொங்கல் பண்டிகள் என்றாலே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டுவது வழக்கமாக ஒன்று.

வரும் 2019-ம் ஆண்டு பொங்கலுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம், சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன், ஜி.வி பிரகாஷின் வாட்ச் மேன் ஆகிய படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் தற்போது சிம்புவின் படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதனால் நெட்டிசன்கள் அஜித், ரஜினி படங்களால் இந்த படம் தள்ளி போய் விட்டது என கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் படப்பிடிப்புகள் இன்னும் முடிவடையாததாலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதாலும் தான் இப்படம் தள்ளி போவதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.